நேசி.

சாலையில் தினமும்
நான் பார்க்கையில்
மனிதர்கள் -
நமக்கு மேல் நடக்கும்
மாற்றங்களை
நிகழ்வுகளை
அறியாதவாறு
செல்கின்றனர்.,
கோடையில் பெரும் மழை;
குளிர்காலத்தில் சுடும் வெய்யில்;
கால நிலையில் மாற்றங்கள்.
இவை என் மனதில் மட்டுமாய்
தாக்கங்களை ஏற்படுத்த.,
மற்றவர்கள் - தங்கள் வழியில்.
பார்க்கையில் - நான் மட்டும்
விநோதப்படுகிரேன்
என்ன ஆயிற்று எனக்கு.,
இயற்கையின் மேல்
காதல் கொண்டு - அதன்
மாற்றங்கள் நம்மால் தான்
என்றுணர்ந்து - வருந்தி
அதை பார்ப்பது - மூடத்தனம்
என்கிறார்கள் - மனிதர்கள்.
நான் யார் அப்பொழுது?
மனிதன் இல்லையா?
நேசிப்பவன் -
மனிதன் இல்லையா?
உட்ற்றவர்களையும்
உடன் பிறந்தவர்களையும்
கடமையாய் நேசிப்பது
இன்றைய வாடிக்கை.,
மாறாக நான் இருப்பது
எனது வாடிக்கை., -
இவை வேடிக்கை
என்றேன்னினாலும்
எனக்கு கவலை இல்லை.,

எழுதியவர் : சோனி ஜோசப் (1-Nov-11, 3:31 pm)
Tanglish : nesi
பார்வை : 297

மேலே