அப்பு அப்பு சொல்வது தப்பு தப்பு
அப்பு அப்புன்னு அவனைச் சொல்லாதே..!
அப்பு அப்புன்னு அப்பீருவேன்..!
தப்பு தப்பு ஒருவர் குறையை நீ கூறுவது..
குட்டு குட்டுன்னு தலேல குட்டீருவேன்..!
குறுகிப் போனது குரோமோசோம் குறைபாடு
குற்றம் செய்தவன் அன்பான அவன் அல்ல..!
வேதனை புரிஞ்சிக்கோ அவன்
வேடிக்கை பொருள் அல்ல...!
குட்டையாய் போனதனால் அவன்
குணம் கெட்டுப் போனவனல்ல...!
குறுகியதே திருக்குறள்...
குறுக்குவழி சொல்வதில்லை...!
குட்டையான அவன் உள்ளம்
கோபுரக் கலசமடா......!
தலை நிமிர்ந்து நமை பார்பபான் அவன்
தன மானச் சிங்கம்டா....!
குனிந்தே அவனை வணங்கு...நல்ல
குணவானாய் நீ மாறி விடு.....!