காதல் என்பானடி கவிஞன்


முகத்தை முழு நிலவென்றேன்
இதழ்களை செம்மாதுளைஎன்றேன்
புன்னகையை முத்துக்கள் என்றேன்
மேனியை பூங்கொடி என்றேன்
மென்பாதங்கள் பூமலர் என்றேன்
விழிகளை துள்ளும் கயல் என்றேன்
உன் அழகை எல்லாம்
உவமைப் பொய்யில் புகழ்ந்துரைத்தேன்
உன் பார்வையை என் சொல்வேன்
பொய்யில் அதற்கு உவமை இல்லை
ஏனெனில்
பார்வை சத்தியமடி பெண்ணே
அதை
காதல் என்பானடி கவிஞன்

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (6-Nov-11, 5:21 pm)
பார்வை : 253

மேலே