என் உயிர் தோழன் ஹரிஹரன் அவர்களுக்கு......
எப்படி எழுதுவேன்
என் உயிர் தோழனுக்கு கவிதை?
எழுதவேண்டும் என்று ஆசை
எங்கிருந்து எடுப்பேன் வார்த்தைகளை?
உன் கவிதைகளைவிட
உன் தனிமடலில் என் மனம் லயித்ததுண்டு!
இதயம் இரண்டும் காதலில் மட்டும் அல்ல,
இருவரது நட்பும் பன்னீர் பூக்கள் என்றால்,
நட்பின் இதயமும் பேசும் என்பதை
உணர்ந்தேன் உன் நட்பில்!
நீ உன் நண்பர்களுக்கு வாய்மொழியில்
நட்பை உணர்த்திருப்பாய்!
எனக்கோ உன் உயிர்மொழியில்
உன் நட்பை உணரச் செய்தாய்!
என் கவிதைகளில்
உன் கருத்துப்பூக்கள்
மலர்ந்ததால் மனம் மகிழ்ந்தேன்!
கோர்வையாக எழுதவில்லை
பார்வைக்காகவும் எழுதவில்லை
பாசமுடன் வரைந்த வானவில் இது!
காதல் சிறையில் வாழ்ந்துள்ளேன்!
நட்பு வட்டத்துக்குள்ளும் வாழ்ந்துள்ளேன்
நட்பு எனும் சிறையில் வாழ்ந்தது இல்லை
அதை உங்களின் நட்பில் உணர்ந்தேன்!
உங்களின் நட்பில் அரவனைக்கப்பட்ட நான்
உறவு சொல்லி அழைக்க ஆசைப்பட்டேன்
ஆனாலும் நண்பனுக்கு
உறவு உடை உடுத்துவதற்கு
மனம் இடம் தரவில்லை!
இப்போதும் எப்போதும்
நீ என் உயிர்த்தோழன்...........
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
