என் தாய் குப்பையம்மா!

தொப்புள்கொடி உறவு
என்னை தூக்கிப்போட்டது,
குப்பைத்தொட்டி உறவு
என்னை தாங்கி கொண்டது.
எச்சில் இலைகள் எனக்கு
சோறு போட்டது,அதிலும்
நாய்கள் பங்குபோட்டது.
கொசுக்களெல்லாம் தாலாட்ட,
குப்பைகளையெல்லாம்
பஞ்சுமெத்தையாக்கி,
என்னை உறங்க வைத்தது
என் தாய்மடி(குப்பைதொட்டி).