கண்ணா வருவாயா! கண்ணா வருவாயா!
தொலைத்துவிட்ட எத்தனையோ பொக்கிசங்களின்
தேடலில் தொலைந்து போகிறது மனிதநேயம்....
கணக்கில்லா கலாச்சார விதியில் விலை
போய்விட்டது தமிழ் பண்பாடு....
ஜீன்ஸ் பாண்டிலும் சல்வார் கம்மிசீளும்
பண்பாட்டு புதுமையை மீட்டிடும் முயற்சியில்
நவீன கண்ணகிகளும், ஆதிரையும்...
தேய்ந்து போன ஆண்மையையும் வீரத்தையும்
வாய்ச்சொல் வாய்க்காலில் பாய்சிடும் பார்த்திபன் சந்ததி..
திண்தோல் காட்டி தீய்மை தேய்த்த வீரம்
தீந்தமிழ் இலக்கியங்களில் அன்றோ...
இலக்கியங்கள் இன்றோ???
பட்டாம்பூச்சி தேடிய மழலை கூட்டம்
புத்தக அட்டையில் பார்த்துகொள்கிறது...
பாசமும் நேசமும் அதற்கு சுயகனினியும்
சுட்டியும் என்றாகிவிட்டது...
ஆடை உரியும் துச்சாதனர்கலாகிவிட்ட
துரோகிகள் மத்தியில் கண்ணனை
தேடி தேடி தேய்ந்து விட்டன
தமிழ் தென்றலின் துள்ளலும்..
பேசி பேசி வென்றது மட்டும்தான் தெரிகிறது விட்டு போன சொந்தங்கள் ?????
எத்தனை முறை இறப்பால் பாரத அன்னை???
சுத்தம் பேசும் அசுத்தங்களையும் அசுத்தம்
சுமக்கும் அபத்தங்களை அதட்டவும் வழியில்லை
அடங்கவும் வழியில்லை தொலைகிறாள்...
தொலைந்து போகிறாள் தொல்லைகள்
தீராதா ஏங்கி ஏங்கி....
கண்ணா வருவாயா கண்ணா வருவாயா