ஒரு பெண்ணின் தேடல்..

(காலத்தின் வேகத்தில் தனது கிராமம் நகரமாக மாறிய போதிலும், செல்ல கெஞ்சலுகளுடன் தனக்கு வரப்போகும் கணவனை எண்ணி ஏங்கும் அழகான ஒரு சராசரி கிராமத்துப் பெண் இவள்)

நேற்றோடு என் வயது இருபத்தோன்று,

வரமாய் வந்து குவியும் வரன்கள் மத்தியில்
தெரிவு செய்வதில் குழம்பிப் போயுள்ள
என் உறவினர்கள்....

யாராவது ஒரு வைத்தியனை
மருமகனாக்க என்னும் என் தந்தை..

மார்க்கப்பற்றுள்ள ஒருவனை
எனக்காய் எண்ணிப்பார்க்கும் தாய்...

தனது இன்ஜீனியர் நண்பனை
தனக்கு மச்சானாக்க துடிக்கும் என் சகோதரன்...

எப்படி என்றாலும் பருவாயில்லை
அவன் ஒரு அரச ஊழியன் என்றால் நன்று
என்று சொல்லும் என் உறவுகள்...!!!!

இவர்களுக்கு மத்தியில்
ரசிக்க தெரிந்த ஒருவனை
தேடி அலையும் என் கன்னி மனது...!!

என் உறவுகளே...
என் உணர்வுகளையும் கொஞ்சம்
செவிமடுப்பீர்களா....???

மருந்து வாசனையை அணைத்துக்கொண்டு
தூங்க இஷ்டமில்லையே அப்பா...........

கெடுபுடி கட்டுப்பாடுகள் எனக்கு
கொஞ்சமும் புடிக்காதே அம்மா......

உன்னோடு ஓட்டிக்கொண்டே திரியும்
உன் நண்பன் எனக்கு வேண்டாமே அண்ணா.......

சின்ன சின்ன ஆசைகள்
எனக்கும் உண்டு உறவுகளே,
முடியுமென்றால் எனக்காய்
நிறைவேற்றி தாருங்களே ...!!

பெரிதாய் ஒன்றுமில்லை,
கருப்போ, சிவப்போ
அதுபற்றி கவலையும் இல்லை - ஆனால்
என் மனது கவரதெரிந்தவனாய் இருக்கவேண்டும் ..!!

என் அன்பான உறவுகளை
பண்பாக பார்க்க வேண்டும்,
நான் பெயர் சொல்லி அழைக்கும்பொழுதுகளில்
அவன் உள்ளத்தால் என்னை உணர வேண்டும்..!!

அளவான வருமானம்,
அமைதியான உரை, நடை - ஆனால்
என்னோடு தனித்திருக்கும் பொழுதுகளில்
மூச்சுவிடமுடியா பேச்சுத்திறன்..!!

நிறைந்த பெண்கள் கூட்டத்தில்
என்னையே தேடத்தெரிந்த கண்கள்!!!

புயலாய் எனக்கெழும் கோபத்தை
தன் புன்னகையால் உடைத்தெறியும் வலிமை!!!

மாதத்தில் மூன்றுநாள் - எனக்காய்
சேவை செய்யும் தன்மை,
தெவிட்டாதது நீ என்று
என்னைத் தெட்டனைக்கும் ஆண்மை...!!!!!

இப்படி உங்களிடம் சொல்லமுடியா
இன்னும் பல...........

திகைத்து நிற்கும் என் உறவுகளே!!!!
அப்படி ஒருவனை தேடுவது
உங்களுக்கு கஷ்டம் என்றால்...
பேசாமல்,

நன்றாக கவிதை எழுத தெரிந்த ஒருவனை
எனக்காய் தேடுங்கள்...!!!!!!

"இயற்கையை இயல்பாய்,
ரசிக்க தெரிந்தவனுக்கு..
நான் ஒன்றும் புதுமைஇல்லையே...,
இயற்கையே இந்த பெண்மையே..!!!!"

எழுதியவர் : முஸ்தாக் அஹமட் (29-Nov-11, 11:34 pm)
பார்வை : 711

மேலே