வேடம்

"சுந்தர மூர்த்தி சரியான பொழக்க தெரியாத மனுசன்பா.யார் சொன்னது இதுவரைக்கும் கடன் வாங்கனது இல்ல! நீ வேற மாணிக்கம், சுந்தரம் அத இன்னும் அந்த ஓலை வீட்லையே இருக்கான். அந்த பானை , சட்டி விக்கரதிலே எப்படி குடும்பம் நடத்த முடியும். எப்போ யாரு பானை , சட்டி வான்குரங்க எல்லாரும் பித்தளை , சில்வர்,அலுமியம் பாத்திரம் தான் வாங்குறாங்க , உலகம் எப்படி போது அதுகுட தெரியாம இப்படி இருக்கான் சுந்தரம், நாடு எப்படி டெல்வேப் ஆகுது புரியாத மனுஷன் அவன்.
அது சரி ராமையா. அவங்க பசங்க வேல பாக்குறாங்க இல்ல அத.
ஆமா தெரிய கலெக்டர் வேல பாக்குறாங்க பாரு அட ரெண்டு பெரும் கல் ஒடைக்குறாங்க. நான் அப்போவே சுந்தரன்கிட சொன்ன என்குட வா மாசம் 2000 ரூபா வரும்னு அவன் கேக்குறமாதிரி இல்ல நான் விட்டுட ராமையா. சரி சரி அமைதியா இரு" மாணிக்கம் சொல்ல அந்த டீகடையே அமைதியானது. துரத்தியில் இருந்த சுந்தரம் பக்கத்தில் வந்தவுடன்.

சுந்தரத்திற்கு தெரியும் எப்படியும் நம்பல்ல பற்றி தான் பேசிருப்பங்க என்று இருந்தாலும் மாணிக்கம் மற்ற எல்லாரையும் ஒரு முறை நலம் விசரிந்த்துவிட்டு வீட்டுக்கு போனார் சுந்தரம்.மாலையால மழை வர மாதிரி இருக்கவே அந்த பானை எல்லாத்தையும் எடுத்து உள்ள வையுங்க என்று உள்ளே இருந்து கொண்டே மனைவி ராஜம் குரல் கொடுத்தால்.சரி ராஜம் நீ விறகு எல்லாம் நினைய விட்டுடாத வா, என்று பதில் குரல் கொடுத்தார் சுந்தரம்.
எவனுக்க எங்க போனானுங்க தெரியல வேல இல்லன வீட்லயே இருக்க மாட்டனுங்க, மழை வருது அங்க அங்க ஒழுக போது இன்னும் எத்தனை நாளுக்குத்தான் எப்படி கஷ்ட பட போறனோ தெரியல்ல அப்படி சொல்லி முடிக்கும் போதே மழை ரொம்ப சத்ததோட வந்தது. சுந்தரம் ஒரு ஓரமா சுவத்துல சாஞ்ச மாதிரி உக்காந்து இருந்தார்..ஏங்க அந்த ஈசானி முலையால ஒழுகுது நீங்க அந்த ஓட சட்டிய எடுத்து வையுங்க, என்று சொல்லிக்கொண்டே அடுப்பில் எரிந்து வெளியே வந்த விறகை உள்ளே தள்ளினால் ராஜம்.
சுந்தரம் மெதுவாக ராஜம் நான் மாணிக்கம்குட போர் வைக்குற வண்டியல வேலைக்கு போலன்னு இருக்க என்ன பண்ணறது எப்படியே இந்த பானை, சட்டிய வேலை மட்டும் நம்பி இருந்த நம்ப பசங்களுக்கு கல்லியணம் எப்படி பண்ணறது நான் காலையல போய் மாணிக்கத்த பார்த்து வேலைக்கு ரெடி பண்ணிட்டு வரேன் ராஜம். சொல்லி கொண்டே அந்த பக்கவாட்டுல ஓட்டை விழுந்த சட்டியல தண்ணி நிரம்பி ஓட்டை வழியா வெளியேறியது பார்த்தார் சுந்தரம் ஏதோ யோசித்துக்கொண்டே அடுப்பில் எரியும் நாணல் தண்டை கொஞ்சம் சினதாக ஒடித்து அந்த ஓட்டையில் அடைத்தமாதிரி வைத்தார் அந்த தண்ணீர் நாணல் உள்ளே புகுந்து சற்று தொலையில் நீர் வெளியேறியது. சிரித்து கொண்டே இதை மனைவிடம் குட சொல்லாமல் விட்டுவிட்டார்.
மறுநாள் காலையிலேயே எழுந்து பக்கத்து டவுனுக்கு போனார் அங்கெ குழாய் ஒன்றை வாங்கி வந்தார் ,ஒரு புது பானை செய்தார் அதில் இந்த குழாயை வைத்து நல்ல பிட் பண்ணி வெயிலில்காய வைத்தார் இத பார்த்த ராஜம் ஏங்க இது என்ன புதுசா இருக்கு சின்ன குழந்தை மாதிரி பண்ணி இருக்கீங்க என்று சொல்லி சிரித்து கொண்டே அவங்க வேலைய பார்க்க பார்த்துகிட்டு இருந்தாங்க.
டவுன்ல இருந்த பொண்ணு கட்டி அந்த ஊருக்கு வந்து இருந்த ஒருத்தர் அதை பார்த்துட்டு இது ரொம்ப நல்ல இருக்கே , பானைய ஓபன் பண்ணாமலே தண்ணி பிடிக்கலாம் போல என்று சொல்லி கொண்டே இது என்ன விலை என்று கேட்டுகொண்டே இருந்த போதே சுந்தரம் வந்துட்டார் வாங்க சார் நல்ல இருக்க ? வேணுமா சார் ?
ஆமா என்ன விலைக்கு கொடுப்பிங்க ?
ரூபா 30 தான் சார்.
இது கொஞ்சம் அதிகம் தான் இருந்தாலும் இது மாதிரி நான் எங்கு பார்க்கல அத இந்த விலை கொடுக்குற சரியாய் என்று சொல்லி விடு அந்த பானையை வாங்கி கொண்டார்.அன்று இரவு மாணிக்கத்திடம் வேலைக்கு போகலாமா இல்ல இந்த வேலையே செய்யலாமா என்று நீண்ட நேரம் யோசித்துகிட்டு இருந்தார் சுந்தரம். அவர்க்கு இதுவரைக்கு நமக்கு சோறு போட்ட இந்த குழவன் வேலைய விட்டு விட்டு போக மனசு இல்ல அவருக்கு அதுவும் இது பரம்பர தொழில்.
மறுநாள் காலையில மாணிக்கம் பார்க்க கிளம்னார் சுந்தரம் , தெரு எதிர் பக்கத்தில் மாணிக்கம் வருவது பார்த்து நின்றார் மாணிக்கம் பக்கத்தில் வந்தவுடன் , மாணிக்கம் எனக்கு இந்த வேலைய விட்டு வர மனசு இல்ல, சொல்லிகிட்டே இருந்த போது அவர்க்கு பக்கத்தில் ஒரு கார் வந்து நின்றது அதில் ஒரு பெரியவர் இறங்கி இங்க யாரு சுந்தரம் என்று கேட்டார்.
நான் தான் சார். என்ன வேணும் சார்?
நீங்க தான் சுந்தரம ! ஓகே நான் பக்கத்து டவுன்ல இருந்து வரேன்.
சொல்லுங்க சார்?
நீங்க நேத்து கொடுத்த அந்த குழா வச்ச பானை பார்த்தேன் நான் பாத்திர கட வச்சி இருக்க நீங்க எனக்கு அந்த மாதிரி பானை செய்து கொடுத்தா நல்ல இருக்கும்.
செய்யல ஆனால் ? என்று சுந்தரம் இழுக்க.
என்ன சொல்லுங்க ?
சரி சார் செய்து தர.
ஓகே சுந்தரம் நீங்க அதற்க்கு ரூபா 50 சொன்னிங்கன்னு அவர் சொன்னாரு, நீங்க வேற வேற சைஸ் ல செய்து கொடுங்க நாம அப்புறமா விலைய பேசிக்கலாம் இந்தாங்க முன்பணம் ரூபா 2000 இருக்கு. என்று கொடுக்க சுந்தரத்திற்கு ஒரே சந்தோசம்.சரி என்று வாங்கி கொண்டார்.அந்த கார் வேகமாக போய்விட்டது.
மெதுவாக மாணிக்கம் பக்கம் திருப்பி எப்போவேமே "செய்யற தொழில கேவலமா நினைக்காத மாணிக்கம் , நேர்மையாவும் , உண்மையாவும் இருந்தால் மட்டும் போதும். நாடகத்துல வசனம் பேசுன மட்டும் போதாது வேடத்திற்கு ஏத்தமாதிரி நடிக்க தெரியவும் அது போலதான் நாம செய்யற தொழிலும் நாகரிகத்துக்கு ஏத்தமாதிரி புதுசா புதுசா செய்யணும் நான் இத சொல்ல தான் வந்தேன் , நான் வரேன் மாணிக்கம்"என்று சொல்லி விட்டு கையில் இருந்த ரூபாயை பாக்கெட்டில் வைத்து கொண்டு தூரத்தில் கார் மறைந்தது இவர் அதை பின் தொடர்ந்தார் தன் வீட்டிற்கு.


(மாறது என்பதை தவிர எல்லாம் மாறும் இந்த நாகரிகத்தில்
கொள்கையை மாற்றி கொள்ளாதே
வேண்டுமென்றால்
உன்
செயல் முறையை மாற்றிகொள்
உன் தொழிலில் )

அன்புடன் வேலு.சி


எழுதியவர் : வேலு (30-Nov-11, 4:02 pm)
Tanglish : vedam
பார்வை : 720

மேலே