மறந்தும் நீ என்னிடம்........

தொடர்ந்து வரும் நாள் எல்லாம்
உன் தோழியாக வேண்டும்.
எனக்கு தோற்க கூடிய
நாள் ஒன்று உண்டெனில்
அதை உன்னால் பெறுவதே
எனக்கு சுகம்.

மறந்தும் நீ என்னிடம்
நன்றி சொன்னதோ
மன்னிப்பு கேட்டதோ கிடையாது.
இனியும் என்னிடம் நீ
அப்படியே இரு.

நம்மிருவரின் உதிரம்
வேறுவேறாக இருந்திருக்கலாம்
நம் கண்களில் உதிரும்
கண்ணீருக்கு காரணம்
ஒரே கவலையாக மட்டுமே இருந்தது
நம் கல்லூரி நாட்களில்...

நெருங்கி வாழ்ந்த காலமெல்லாம்
நெடுந்தூரம் ஆகிவிட்டது.
இன்று,செல்போனில்
சிரித்து பேசக்கூட நேரமில்லை
நம் சந்தேக மாமியார்களால்...

எழுதியவர் : வென்றான் (1-Dec-11, 6:20 pm)
பார்வை : 639

மேலே