உனக்காக காத்திருந்தேன்..........!
கிழக்கு திசை வெளுத்தாலும்,
எனக்கு திசை வெளுப்பதில்லை
உன் வருகை இல்லாமல்
எனக்கு வெளிச்சம் இல்லை!
என் உள்ளங்கை ரேகைகளைப்
பார்த்திருந்தேன்,
கையோடு கை சேர்க்க வருவாயா?
கன்னத்தோடு கன்னம் வைக்க வருவாயா?
உன்னை நினைத்து
மீட்டுகின்றேன் இசையை,
புதிது புதிதாய் ராகங்கள் வருகின்றன!
ராசாத்தி நீ மட்டும் வராததேனோ?
என் வீட்டுத் தோட்டத்தில்
மலர்கள் நித்தமும் மலர்கின்றன,
உன் வருகைக்காக என் ரத்தமும் ஏங்குகிறது
மரிக்கொழுந்தே உன் மலர் முகம் காட்டாததேனோ?
நான் வாழும் போது நீ வந்தால்
வசந்தமாகும் என் வாழ்க்கை,
நான் மரித்த போது நீ வந்தால்
மோட்ச்சம் போவேன் நான்!
மோட்ச்சம் வேண்டாம் பெண்ணே
உன் வருகையால்
என் வாழ்க்கை
வசந்தமாகட்டும் கண்ணே..............