நண்பன் அல்ல..!!!
என் லட்சியத்தில் முன்னேற்ற
என்ன வேண்டும் என கேட்டாய்..,
பசியில் மயங்கி கிடக்கும் பொழுது
கடன் வாங்கி உணவளித்தாய்...,
உருப்பிட மாட்டேன் என அனைவரும்
கூறிய பொழுது எனக்காக வாதிட்டாய்..,
காதலில் தோற்று கதறிய பொழுது
கரம் பிடித்து வாழ்க்கை திசை அழைத்து சென்றாய்...,
என் துன்பங்களையும்
உன் தோளில் சுமந்தவனே
நீ எனக்கு நண்பன் அல்ல
இன்னொரு தகப்பன்..!!!