இயற்கை
நிலவு வந்ததால்
கதிர் மறைந்ததா...
கதிர் தோன்றியதால்
நிலவு மறைந்ததா...
இரவு கடந்தபின்
காலை கொண்டதா...
காலை கொண்டதால்
இரவு கடந்ததா...
இருள் பிறந்ததே
வெளிச்சம் அடைவதற்கா...
வெளிச்சம் மறைவதே
இருளில் சேர்வதற்கா..
இடி இசைத்ததும்
மேகம் கசிந்ததா....
மேகம் கசிவதே
இடியின் இசையிலா....
இறப்பை தொடுவதே
பிறப்பை கடப்பதே...
பிறப்பை தொடர்வதே
இறப்பை காண்பதா...