200 !!! காதல் கிறுக்கல்கள் !!! 200

உன்னைவிட
அதிகமாகத்தான்
பேசுகிறது - உன்
நிழற்படம் என்னிடம்...!!!
*** *** ***
பூக்களுக்குகூட
உன்னைப்போல்
வெட்கப்பட தெரியாது
எந்த ஒரு கவிதையும்
உன் வெட்கத்திற்கு
மிகையாகாது ...!!!
*** *** ***
நீ எவ்வளவு பெரிய
பேரழகி என்று - நீ
என்னுடன் இருந்த
அந்த இரவுக்கு
மட்டும்தான் தெரியும் ...!!!
*** *** ***
உன்னை நெருங்கி
வாழ்வதைவிட
உன்னை நினைத்து
வாழ்வதில்தான்
சுகம் அதிகம் ...!!!
*** *** ***
உன்னைவிட
அழகான ஒருத்தி
என்னை
திரும்பி பார்த்தபோதும்கூட
உன்னை மட்டுமே
நினைக்கும் இந்த
பொல்லாத மனசுக்கு
சரியான தண்டனைதான் - நீ
என்னை
திரும்பிகூட
பார்க்காமல் போவது ...!!!
*** *** ***
உன்னைவிட வசதியாகவோ
உன்னைவிட அழகாகவோ
உன்னைவிட நல்லவலாகவோ
ஆயிரம்பேர் கிடைக்கலாம்
ஆனால்
உன்னை போல் ஒருத்தி
கிடைப்பாளா? எனக்கு? ...!!!
*** *** ***
உங்க வீட்டில்
விருப்பமில்லை என்றால்
எனக்கு என்ன?
உனக்கு விருப்பம்
இருந்தால் சொல்!
காதலில் போராடி
ஜெயித்துவிடத்தான்
எனக்கும் விருப்பம் ...!!!
*** *** ***
தோற்றுத்தான் போனோம்
நான் உன்னிடமும்
நீ உன் பெற்றோரிடமும் ...!!!
*** *** ***
ஒரு நொடி போதும்
உன்னை
திருடி கொண்டுபோய்
திருமணம் செய்துகொள்ள!
ஆனால் உனக்கு
இரண்டு மனசு
ஒன்று எனக்கும்
ஒன்று உன் பெற்றோருக்கும் ...!!!
*** *** ***
நமக்குள் நடக்கும்
சிறு சிறு போட்டிகளில்
நீ தோற்க்ககூடாது
என்பதற்காய் - நான்
வேண்டுமென்றே உன்னிடம்
தோற்று போவேன்
அதில் அப்பொழுது
எனக்கு சந்தோசம்
இன்றும்
தெரிந்தே உன்னிடம்
தோற்றுபோனேன்
ஆனால் அழுகிறேன்
அநேகமாக
இதுதான் உன்னிடம்
நான் தோற்கும்
கடைசி தோல்வி
என்று நினைக்கிறேன் ...!!!
*** *** ***
எல்லோருக்கும் ஒரு பார்வை
எனக்குமட்டும் ஒரு பார்வை
எல்லோருக்கும் ஒரு சிரிப்பு
எனக்குமட்டும் ஒரு சிரிப்பு
எல்லோருக்கும் ஒரு வார்த்தை
எனக்குமட்டும் ஒரு வார்த்தை
எல்லோருக்கும் ஒரு காட்சி
எனக்குமட்டும் ஒரு காட்சி
எல்லோருக்கும் ஒரு அன்பு
எனக்குமட்டும் ஒரு அன்பு
எல்லோருக்கும் ஒரு வெட்கம்
எனக்குமட்டும் ஒரு வெட்கம்
இப்படி எனக்காக நீ
கொடுத்த எல்லாவற்றையும்
உன் நினைவுகளோடு
பத்திரமாய்
சேமித்து வைத்திருக்கிறேன்
உன்னைத்தவிர ...!!!
*** *** ***
இனியும் தாக்குதல்
நடத்துவது
வீண்தான்!
மரத்துப்போன
மன வடுக்களில் ...!!!
*** *** ***
எத்தனைமுறை
தைத்தாலும்
அம்புகளுக்கு வலிப்பதில்லை!
''அவள் பார்வைகளும்
வார்த்தைகளும்'' ...!!!
*** *** ***
இருவரும்தான்
இடறி விழுந்தோம்
ஆனால்
வலிகள் மட்டும்
எனக்கு சொந்தம் ...!!!
*** *** ***
யாருக்கும் தெரியாமல்
பிடித்த கை
ஊரார்களுக்கு தெரிந்து
பிடிக்கமுடியாத ஊனம்!
''நம் காதல்'' ...!!!
*** *** ***
சிறு மூளையை
பெருமூளை
கொள்ள முயல
பெருமூலையை
சிறு மூளை
கொள்ள முயல
போராட்டத்தின் முடிவில்
பைத்தியம் என்ற
பட்டம் மட்டும் எனக்கு ...!!!
*** *** ***
நாம் பிரிந்து போனால் என்ன?
மறந்து போனால் என்ன?
இதோ இந்த
கடும் கரு இரவு
கனவுகளாய் உன்னை
என்னிடம்
கொண்டு வந்து சேர்த்திடும் ...!!!
*** *** ***
உன் விருப்பங்களை
எப்படியாவது
நிறைவேற்றிவிட வேண்டும்
என்பதுதான்
என் விருப்பம்
அதனால்தான் நீ
பிரிந்துவிடலாம் என்று
சொன்னதைகூட
நிறைவேற்ற
முயற்ச்சித்து கொண்டு
இருக்கிறேன் ...!!!
*** *** ***
உன் விருப்பப்படியே
நாம் பிரிந்துபோயவிட்டோம்
ஆனால்
இன்னும் மறந்து
போய்விடவில்லை ...!!!
*** *** ***
எத்தனையோ
தோல்விகளை
தோல்சுமந்து கொண்டு
இருக்கிறேன் - ஆனாலும்
இந்த காதல்
சுமக்கமுடியாத வலி ...!!!
*** *** ***
என்றைக்காவது
என் நினைவு
உனக்கு வந்தால்
வானத்தை
அண்ணார்ந்து பார்த்துக்கொள்
இரவில் நிலவாகவும்
பகலில் சூரியனாகவும்
உன்னையே
சுற்றிக்கொண்டு இருப்பேன் ...!!!
*** *** ***