காதலை பரிசளிக்க...

காலமெல்லாம் உன்னோடு வாழவே
கனாக்கண்டேன் என்னுயிரே....

மனதெல்லாம் உன்னை நினைவாய் தத்தெடுத்தேன் என் கனவே...

உன்னை மனதில் சுமந்த
என் இதயத்திற்கு நீ கொடுத்த பரிசு
உன்னுடைய திருமண அழைப்பிதழ்....

உடைந்து சிதறிய மனதிற்கு ஒருமுறையேனும்
அனுமதி கொடு நான் தேக்கிவைத்த
காதலையெல்லாம் கண்ணீர் துளிகளென
உனக்கு பரிசளிக்க....

எழுதியவர் : anusha (15-Dec-11, 3:45 pm)
சேர்த்தது : Anushaa
பார்வை : 307

மேலே