என்ன சொல்ல போகிறேன் அவனிடம்..!!!
அத்தனை நண்பர்களும் தோழிகளும்
பார்த்து பொறாமை பட்ட
காதல் நம்முடையது ..
ஒன்றாக சேர்ந்து
இரு சக்கர வாகனத்தில்
சிட்டாக பறப்போம்
உனக்கு நானும், எனக்கு நீயும்
புதிய உடைகளை
தேர்வு செய்வோம்
நண்பர்களின் திருமணத்திற்கு
சேர்ந்து சென்று
அங்கு அனைவரையும்
நம்மை பற்றி
கிசுகிசுக்க வைப்போம்
திருமணத்திற்கு பின்
பிறக்கப்போகும் குட்டி பாப்பாவிற்கு
சிறிய கவுன் வாங்கி
உன் தோழிகளின் கிண்டலுக்கு
வெட்கத்தில் சிவந்தோம்
மழையில் நனைந்து ஊர்சுற்றி
ஸ்பென்சர் வளாக
குளுகுளு ஏசியில் நடுங்கி
கைகள் கோர்த்து
ஷாப்பிங் செய்வோம்
இப்படி
ரசித்து ரசித்து
விட்டுக்கொடுத்து வாழ்ந்த நம்மை
காதல் கைவிட்டது ஏனோ தெரியவில்லை..???
நாம் பிரிந்த கணத்தை
இன்னும் என்னால் நம்ப முடியவில்லை
ஆனால் இனி பயனில்லை
சில மாதங்கள் கடந்து
நீயில்லாமல்
தனியாக செல்லும் என்னை
வழிமறித்து
நலம் விசாரித்தபடியே
என் முகத்தில்
உன்னையும் உன் நலத்தையும்
தேடுகிறான்,
நாம் பிரிந்த செய்தி
அறியாத என் நண்பன்..!!!
எந்த தேசத்தில்
எந்த ஊரில்
எந்த வீத்யில் நீ
என்ன சொல்ல போகிறேன் அவனிடம்..!!!