என்னுள் பூத்த முதல் நட்பே!!!....

வலது கை
இடது காதை
மூடிய தருணம் அது...
ஆம் ... நாம்
பள்ளியில் சேர்ந்த
அழகான காலம்!!!...

புது மொட்டாய்
புத்தகப் பையை சுமந்தோம்
முழு மதியாய்
அறிவினில் திகழ்ந்தோம்
அன்னையின் வளர்ப்பிலே!!!...

நம்மை நாமே அறியாத
குழந்தைப் பருவம்...
அதில் எங்கே
உன்னை நானும்
என்னை நீயும் அறிய !?!...

உனக்கு நான்
குறைவில்லை என
ஓயாத போட்டி...
உன்னை நானும்
என்னை நீயும்
வென்றிட கொடுக்கும்
மதிப்பெண் பட்டியலின்
முதல் ரேங்க்!!!...

ஐந்து வருட படிப்பு
ஐந்தே நிமிடத்தில் கரைய....
சிங்கரா சிட்டுக்கள்
சில்வண்டாய் மாற!!!...

நீயும் நானும்
தனித்தனியாய்
வெவ்வேறு பள்ளியில்...

நட்பென்ற வார்த்தையை அறியாத
குழந்தைப் பருவம் அது !!!...

காலங்கள் கரைய
எப்பொழுதாவது
எங்கேயாவது கேட்கும்
உந்தன் பெயரும்!!!....

அழகாய் சிரிப்பாய்
கன்னத்தில் குழி விழ...
இவை மட்டுமே
உந்தன் நியாபகமாய் !!!....

வருடங்கள் பல கடந்து
நீயும் நானும்...
பருவச் சிட்டாய் மாறிய வேளை!!!...

எங்கோ நீ பணி செய்ய...
எங்கோ நான் உயர் படிப்பைத் தொடர!!!...

காணாத நம் கண்ணும்
பேசாத நம் இதழும்
சொல்லாமல் சொல்லியது
மனதின் வலியை
நம் நட்பின் பிரிவை!!!...

எங்கேயோ திருவிழாவில்
உன்னைப் பார்த்த
நியாபகம்!!! ...
தவறாமல் கண்கள் தேடும்
வருடம் ஒரு முறை!!!...

என் நட்பே!!!...
என் நியாபகம்
ஒரு நொடியாவது
உன்னுள்ளே வராதா என!?!...
நித்தமும் தோன்றும்
உந்தன் நினைவுகள்!!!...

நினைவுகள் நீண்டியதால்
ஏக்கமாய் மாறியதோ???...
என்னுள் பூத்த முதல் நட்பை
ஒரு முறையாவது காலம்
காட்டி விடாதாவென்று !!!...

இப்படி நானிருக்க நீயோ!!!...

இணையதளத்தில்
வலையிட்டுத் தேடியிருக்கிறாய்!!!...
உன் குழந்தை நட்பு
உனக்கு கிட்டி விடாதாவென
வருடங்கள் பல!!!....

மறுபடியும் நம் பணியை
நாம் தொடர...
காலங்கள் நம் நினைவை
கரைத்தே விட்டது!!!...

மீண்டும் வந்த
வசந்த காலமோ அது!!!...

ஆம்!!!...
உன் தேடலுக்கு
விடை கிடைத்தது!!!....

வலைபின்னல்
உன் எண்ணங்களை
வண்ண மயமாக்க
என் பெயரை
facebook -ல் காட்டியதோ!!!...

ஆம்!!!...
நம் நட்பின் நினைவுகளே
நம்மைச் சேர்க்க!!!...

திகட்டாத தேனினை
அள்ளிப் பருகினோம்
நட்பின் வடிவிலே!!!...

என்னுள் பூத்த முதல் நட்பே
இறுதி வரை தொடரும்
நம் நட்பின் பாதை...
ஜென்மங்கள் பல கடந்து!!!....

-ப்ரியமுடன்
நிலா தோழி...

எழுதியவர் : நிலா தோழி.... (29-Dec-11, 5:07 pm)
பார்வை : 658

மேலே