----போராடு------

----போராடு-----

நான் உயிரோடு இருக்கிறேன்..
உலகம் அழிந்தால்
எனகென்ன வந்தது..
இது சோம்பேறி சொன்னது..

உரசாதவரை நான் ஊமை
உரசிவிட்டால் நான் நெருப்பு
இது
சின்ன தீக்குச்சி
சொன்னது...

முன்னே நாம் எட்டுவைத்தால்
பின்வாங்கும்
யானை படையும்.

அட நண்பா!
முள் கீறியா - நம்
முதுகெலும்பு உடையும்.

குனிந்தவனுக்கு மூட்டை சுமப்பதுக்கூட
குறுக்கு வலி..
துணிந்தவனுக்கு சீன பெருஞ்சுவர் கூட
குறுக்கு வழி.

கதவுகள் திறக்கும் வரை தட்டு..
கை இல்லாதவனா.. தலையால் முட்டு...

வேர்க்க வேர்க்க உழைத்து வா..
தோற்க்க தோற்க்க எழுந்து வா..

நீ கும்பிடுவதால்தான்
சாமி பொழச்சிருக்கு..
உன் காலுக்கு கீழதான்
பூமி மொளச்சிருக்கு...

மனிதன் என்ற பேரொடு
மரணம் வரை போராடு...

---தன்னம்பிக்கையோடு---
-------தமிழ்தாசன்--------

எழுதியவர் : --தமிழ்தாசன்--- (30-Dec-11, 4:55 pm)
பார்வை : 364

மேலே