மீசை !!! வைக்கவா !!! வேணாமா !!!!


முடி திருத்தகத்தில்
முடி வெட்டிகொள்ள...
முணுமுணுத்து (மனதுக்குள்) கொண்டு இருக்கிறேன்..
முடிவெடுக்க... முடியாமல்...

மீண்டும் யோசனை......
மீசை வைக்கலாமா !!! வேணாமா !!!
மீசையை தடவியபடி...
மனதுக்குள் பட்டி மன்றம்....

கவிதை போக்கில் சிந்தித்தால்...

என் இதழ்களின் புருவம்;
பருவ நூலின் முக உரை..மீசை..
என் இளமைக் காலம் வரைந்த கறுப்பு கோலம்;
ஆண்மையின் அடையாளம்;
கொதிக்கும் ரத்தம் வெளியிடும் கரும்புகை...
வாலிப வில்லை முறுக்கும் வசீகர நாண்;

உன் நினைவில் என் மீசையை யோசித்தால் ...

உன் உதடுகளும் என் உதடுகளும் பேசும்
ரகசிய பாஷைக்கு - அவர் தானே காவல் காரர்ன்...
காயமே இல்லாமல் உன்னை வெட்கம் சிந்த
வைத்த இந்த ரோமகூட்டங்கள்.. போர் கூர்வாளோ ???


கால போக்கில் சிந்தித்தால்...

இன்றோடு போகட்டும் .. இந்த நச்சரிப்பு மீசை..
உதட்டோரம் எனக்கு... வீண் சுமை...
வெறுமென முகப்பு தோரணம்...
முனுமுனுக்கும் கம்பளி பூச்சி...

உண்மையை சொன்னால்...
மோக யுத்தத்தில் முத்தத்தின் எதிரி !!!!
பொய் ஒன்று சொன்னால்..
என் மீசை.. உன் மேல் உதட்டை கர்ப்பம் ஆக்கியதோ..

எப்படி வைப்பது என யோசித்தால்......

ஹிட்லர் மீசை, வீரப்பன் மீசை,
புலிகேசி மீசை..அரும்பு மீசை, ம பொ சி மீசை...
அப்பப்பா!!!எத்தனை வகை..
எத்தனை பிரிவு.... என்னத்த சொல்றது...

வீரப்பன் , ஹிட்லர் பரவாயில்லை - ம பொ சி மீசை ?..
இந்த மீசை வைச்சு சாப்பாடு சாப்டுறதுகுள்ள !!!
ம பொ சி அய்யா..கஷ்டம்தான்..
யோசிச்சாலே ....... பாவமா இருக்கே....

மீசை என்ன !! பொல்லாத மீசை!!..
மீசை முலைதொரேல்லாம் பாரதி என்றால்...
எக்கசக்க பாரதி வந்திருக்கணுமே !!!!

தேம்மதுண்டு மீசை வைக்க ...
எத்தா...தண்டி யோசனை......
மீசையை மெதுவாக தடவியபடி...
மறுபடியும் யோசனையில் நான்.......


முடிவெடுக்க முடியாமல்...
முக்கிய முடிவுகளை .... உங்கள்
முன் விட்டு விடுகிறேன்....கருத்துகளின்
முடிவை கொண்டு...மீண்டும் நாளை வருகிறேன்...
முடி திருத்தகத்துக்கு...

எழுதியவர் : கலிபா சாஹிப்.. (3-Jan-12, 12:16 pm)
பார்வை : 434

மேலே