ஏதோ ஒரு தேவ கணத்தில் . . .

கவிதையை போலவே
காதலும் சும்மா தான்
கிடக்கின்றன - யாரோ
ஒருவர் கையில் கிடைக்கும் வரை.
வாசித்த பின்பு தான்
தெரிகிறது அதன்
ஆழமும் அர்த்தங்களும் . . . .

உன்னை பார்க்கும் முன்பு வரை
நான் நானாகத்தான் இருந்தேன்
உன்னை பார்த்த பின்பும் கூட தான்,
ஆனால் ஏதோ ஒரு தேவ கணத்தில் தான்
அது நடந்திருக்க வேண்டும் உன்னால்
என்னில் அந்த மாற்றங்கள் . . .

நானாக இருந்த நான் - எனக்கே
யாரோவாகி விட்டேன்
கவிதையும் காதலும்
கிறங்கடிக்கிறது - உன்னைப் போலவே . . .

விழுந்து விடாமல் எழுந்து நிற்க
உன் தோள் பிடித்தேன் - ஆனால்
மீண்டும் உன்னிலேயே
விழுந்து விட்டேன் . . . .

இனிய அவஸ்தை தான்
ஆனாலும் இன்னும் வேண்டுமே என
ஏங்குகிறது மனம் என்னைப் போலவே
உன்னை எண்ணி. . . .

எழுதியவர் : honey (10-Jan-12, 6:07 pm)
சேர்த்தது : honeywing
பார்வை : 241

மேலே