ஒரு நாயகன் உதயமாகிறான்
ஒரு நடுத்தர குடும்பத்தில் இரண்டாவது குழந்தையாக பிறக்கிறான் நமது கதையின் நாகன்.
குழந்தை வளர்த்து 3 வயது பள்ளிகூடத்தில் சேர்கிறார்கள் தாய் தந்தையர், பொதுவாக குழந்தைகள் பள்ளிக்கு செல்ல அடம்பிடிப்பார்கள் அனால் நம் கதையின் நாயகன் அப்படியல்ல.
தொடங்குகிறது வாழ்கை முதலாவது அடியே double promotion என்று சொல்ல்வார்கலே அப்படி, L.K.G படிக்காமல் நேராக U.K.G. தொடர்ந்தது படிப்பு, U.K.G பிறகு தமிழ் வழி கல்விக்கு மாறுகிறான்.
மிகவும் பண்புடையவனாக வளர்த்துவரும் அவன் சிறிது பயமுள்ளவனகவும் வளர்கிறான், சுமாராக படிக்கவும் செய்கிறான். 3 ஆம் வகுப்பில் நட்பு வட்டாரம் பெருகுகிறது சேட்டைகள் செய்து மாட்டிகொள்கிறான் இருந்தபோதும் மற்ற மாணவர்களுடன் ஒப்பிடுகையில் ஆசிரியருக்கு பிடித்த மாணவன் வரிசையில் வருகிறான்.
4 ஆம் வகுப்பில் சற்று நன்றாக படிப்பவர் வரிசையில் சேருகிறான், முடிந்தது 5 வகுப்பில் அதிக பாடங்களில் தேர்ச்சி பெறமுடியாமல் தோல்வி அடைகிறான். வகுப்பறையில் ஆசிரியர் கடுமையாக சாட அந்த மாதத்தில் இருந்து அணைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெரும் மனவனகிறான்.
ஆரம்பம் முதலே ஆங்கிலத்தில் நாட்டம் உள்ளவனாக இருக்கும் அவனுக்கு 6 வகுப்பு ஒரு தனி இடத்தை பெற்று தருகிறது.
ஆண்டுக்கொருமுறை இன்ச்பெக்டியன் என்று பள்ளிகல்வி துறையிலிருந்து வருவார்களே அப்படி ஒரு சமயம், படிக்கும் மாணவர்கள் முதல் பெஞ்ச், படிக்காத மாணவனை கடைசி bench சிலும் அமர வைகிறார்கள்.
நமது கதையின் நாயகனை வழக்கம்போல last benchil அமரவைகிரர்கள். inspection வந்த inspectero 6 ஆம் வகுப்புக்கு வந்தவுடன் ஆங்கில படத்தில் கேள்விகளை கேக்க அணைத்து மாணவர்களும் தவிக்கிறார்கள்......
அப்பொழுது கடைசி பெஞ்ச் மனவனகியா கதையின் நாயகன் பதில் அளிக்கிறான், உண்மையாகவே அனைத்து கேள்விகளுக்குமே அவனே விடை சொல்லுகிறான். வந்த இன்ஸ்பெக்டர் அந்த மாணவனை பாராட்டியதோடு வகுப்பு ஆசிரியரை அழைத்து என் நன்றாக படிக்கும் மாணவனை கடைசி பெஞ்சில் அமரவைதிருகிரீர்கள் என்று கேட்டு, அந்த மாணவனிடம் வந்து very good சொல்லிவிட்டு செல்கிறார்.
அன்றிலிருந்து கதையின் நாயகன் ஆசிரியருக்கு அருகில் அமர ஆரம்பிக்கிறான், அனைத்து பாடங்களையும் நன்றாக படித்து முதல் 3 மாணவர்களில் ஒருவனாக வருகிறான்.
7 ஆம் வகுப்பில் மிக நன்றாக படிக்கும் மாணவனாக வருகிறான் முதல் முறையாக கணக்கு படத்தில் 100/100 வாங்கி ஆசிரியரின் நன்மதிப்பையும், பரிசையும் பெறுகிறான்.
பள்ளியில் நடக்கும் அனைத்து கலை நிகழ்ச்சி அச்செம்ப்லி prayer அனைத்து இவன் இல்லாமல் நடக்காது அப்படி ஒரு சுறுசுறுப்பான பையனாக மறுக்கிறான்.
அப்படி மாறும் அந்த பையனின் 8 ஆம் வகுப்பில் ஒரு எதிர்பாராத நிகழ்வு நடக்கிறது.
தொடர்ந்து படிக்கவும் விரைவில் எழுதி முடிக்கிறேன். பல சுவாரசிய நிகழ்வுகள் காத்திருக்கின்றன..................