வண்ணக் கொடிக்கு முதல் வணக்கம்..!
![](https://eluthu.com/images/loading.gif)
பட்டொளிவீசி வானில் பறக்குது வண்ணக்கொடி
எத்தனைஎத்தனையோ தியாகத்தின் சின்னக்கொடி
தீரப்பெரும் செம்மல்களின் தியாகம்
அன்று நம்மை வீர குடியரசாக்கியது
நாடுகக்கும் வீரர்களின் அயராத உழைப்பு
இன்று நம்மை நிம்மதியாக வாழவைக்கிறது..
நன்றி சொல்வோம் நாம் இந்நன்னாளில்
நாளும் மனதில் வைப்போம் அவர்களின் நல்வாழ்வை
உழைப்போம் உறுதியோடு நாமும்நாடும் வலமாக
இந்தியக் குடியரசு உலகின் முடியரசாக மாறும் நலமாக..!
வந்தேமாதரம்.. வந்தேமாதரம்..!!