மாற்றம்

மாற்றம்மில்லா வாழ்வில்
ஏற்றமேது !!

சில மாற்றம்
தடுமாற்றம் !!

சில மாற்றம்
நிலை ஏற்றம் !!

கேள்விகள் மாற்றம்
கொண்டுவரும் - விடை
மாற்றான் கையில் இல்லை !!

தோல்விகள் மாற்றம்
கொண்டுவரும் - வெற்றி
தோளில் மிதித்தவன் பையில் இல்லை!!

வார்த்தைகள் மாற்றம்
கொண்டுவரும் - ஒலி
எதிரில் நிற்பானிடம் இல்லை !!

நடத்தைகள் மாற்றம்
கொண்டுவரும் - நன்நெறி
பக்கத்தில் நடப்பானிடம் இல்லை !!

எழுத்துக்கள் மாற்றம்
கொண்டுவரும் - எழுத
பேனாவிற்கு மூளை இல்லை!!

எடுக்கும் முடிவு மாற்றம்
கொண்டுவரும் - முடிவுகள் மற்றொருவன் எண்ணத்தில் இல்லை!!

எது எப்படி இருந்தாலும் .....

கேள்வியும் தோல்வியும்
வார்த்தையும் - நல்
நடத்தையும் எடுக்கும் புது முடிவில் கொண்டுவரட்டும் நல்லதோர் மாற்றம்

எழுதியவர் : (26-Jan-12, 2:36 pm)
Tanglish : maatram
பார்வை : 199

புதிய படைப்புகள்

மேலே