அப்பாவின் பாசம்...,
நான் உங்கள் மகளாக பிறந்ததற்கு...,
கடவுளுக்கு நன்றி சொல்கிறேன்
அன்னை சுமந்தால் பத்துமாதம்-
காலம் முழுவதும் நான் சுமக்கிறேன் உன்னை -என பிறந்ததும் கூறினாய்...,
இடையில் என்னை விட்டு செல்வாய்
என்பது தெரியாமல்....,
நான் சிரிக்கும் போது புன்னகையாய்
இருந்தாய்....,
நான் அழும் போது கண்ணீராக
வடிந்தாய்...,
தொட்டிலில் தூங்கினால் விழுந்து விடுவேனோ
என்பதால்-
உன் தோள் மீது உறங்க வைத்தாய்
பெண்ணாய் பிறந்தும்-ஆண் பிள்ளைபோல்
வீரமுட்டி வளர்த்தாய்...,
நல்லது மட்டுமே கூறி வளர்த்தாய்-
என் வாழ்கையில் எப்போதும் ஊன்று கோளாய் இருப்பாய் என்ற நம்பிக்கையில்
நன்றி கெட்ட மனிதர்களை பற்றி கூறாமல்...,
நானும் வளர்ந்தேன் காலமும் சென்றது...,
நான் பூப்பைதியதும் உனக்குள் கவலை
வந்ததை-உன் முகம் பார்த்து அறிந்தேன்
உன் மகள் நான் எதற்காக உனக்கு
கவலைகள்- "அப்பா"
விளையட்டாய் கூட என்னை அடிக்க கை
ஓங்கியது இல்லை...,
பொய்யாக நான் விடும் கண்ணீருக்கு
நீ அழுவாய்- உண்மையாக
இருப்பினும் ஏன் "அப்பா" என்னை விட்டு
சென்றாய் - கடவுளுக்கு அன்பு போதிக்கவா!
இல்லை நான் உண்மையாக அழ
வேண்டும் என்பதற்காகவா ?
உன் விருப்படியே படித்தேன்
பட்டமும் பெற்றேன்...,
பாராட்ட நீ இல்லையே-"அப்பா"
நல்லதொரு வேலையும் பெற்றேன்...,
நீ இல்லையே சந்தோசப்பட....
என்னிடம் பொய் கூறி விட்டாய்
காலம் முழுவதும் சுமப்பேன் என்று...,
உன்னை நினைக்கும் போது- ஆறுதல் சொல்ல
கண்ணீர் மட்டுமே எனக்கு...,
-ஆனால்
என்னை பற்றிய நினைவே இல்லாமல் -
உறங்கி கொண்டிருக்கிறாய் மண்ணுக்குள்ளே....,
பாராட்டி, சீராட்டி, வளர்த்தாய்...,