காண்பதெல்லாம்

காண்பதெல்லாம்

கதிரவன் வர
காலை கதிரைக்கண்டேன்

காலடியில் நிழல் மறைய
நிஜத்தைக்கண்டேன்

பொழுது போக
கண்ணை மறைக்கும்
இரவைக்கண்டேன்

ஒஞ்ச மழையில்
என் வீடு
பெய்ய கண்டேன்

பேஞ்ச மழையில்
பெருவிரால்
நீந்தக்கண்டேன்

ஏழைகளின் கண்ணில்
வரைபடத்தில் இல்லாத
நதியைக்கண்டேன்

கடல் தாவி வரும்
அலை
கரையில் கரையக்கண்டேன்

காய்ந்த மரத்தில்
ஒரு குடும்பம்
வாழக்கண்டேன்

கறந்த பாலில்
கரையான்
வரக்கண்டேன்

மானொன்று ஓடக்கண்டேன்
மயில் வந்து ஆடக்கண்டேன்
கிளி போல் பேசக்கண்டேன்
கிளை தாவி இருக்ககண்டேன்

நிலா தேய்ந்து வர
கோழி கூவக்கண்டேன்
நினைவு மீண்டு வந்தேன்

காண்பதெல்லாம்

கனவு! கனவு! கனவு!

நாகராஜன் சமுத்திரம்
ரெட்டைக்குளம்

எழுதியவர் : நாகராஜன் சமுத்திரம் (27-Jan-12, 8:02 pm)
பார்வை : 401

மேலே