பேனாவை தீட்டுங்க

கூடை நிறைய பூக்கள் உண்டு
எடுப்பதற்கு யாரும் இல்ல
நாடு நிறைய அறிவு உண்டு
பயன்படுத்த நாதி இல்ல

ஆரியப்பட்டாவும் பிரம்மகுப்தாவும்
சுஸ்ருதாவும் யாருங்க
இவங்களெல்லாம் பண்டைக்காலத்து
அறிவியல் அறிஞர் தானுங்க

வானியலும் கணிதமும் மருத்துவமும்
வளர்ந்து செழித்த நாடுங்க
சான்று காட்டி விளக்குகிறேன்
நீங்க கொஞ்சம் பாருங்க

பெரிய எண்கள உருவாக்க
உலகமே திணறிய நேரத்துல
தசாம்ச முறைய வகுத்ததுதான் யாருங்க
நாமதானுங்க

ஐரோப்பியரெல்லாம் அநாகரிகமா திரிகையில
ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலே
அழகுமிகு நாகரீகம் படைத்ததுதான் யாருங்க
நாமதானுங்க
ஆதாரம் சிந்துசமவெளி தானுங்க

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலே
அறுவை சிகிச்சைய கண்டுபிடித்தது யாருங்க
நாமதானுங்க
ஆங்கில மருத்துவம் என்னங்க
நம் மருத்துவத்தின் மறுபதிப்பு தானுங்க

இதையெல்லாம் ஏன் நான் சொல்றேன்
நீங்க கொஞ்சம் கேளுங்க
நாடு நிறைய அறிவுண்டு
அதை பயன்படுத்த நாதி இல்ல

இதற்கெல்லாம் முட்டுக்கட்டை போட்டதாருங்க அதுவும் நாமதானுங்க
இடைக்காலத்தே நம்மிடத்தே தோன்றியது
என்னங்க
மூடநம்பிக்கையும் வகுப்புவாதமும் மதவெறியும் தானுங்க
இதையெல்லாம் அழிச்சிப்புட்டா பாருங்க
நம்ம நாடு செழித்திடும் கேளுங்க!

கவிகளே! கவிகளே !
இதையெல்லாம் மாய்ப்பதற்கு பேனா முனைய
தீட்டுங்க! எழுத்தால இந்தியனை எழுப்புங்க!
இழந்த அறிவை மீட்டிடத்தான் எழுதுங்க!

எழுதியவர் : பொ பொற்செழியன் (27-Jan-12, 8:11 pm)
பார்வை : 320

மேலே