வாருங்கள் வாழ்க்கைப்பாடம் படிப்போம்

நான் அறிந்தது? அறியாததுபல.
இன்றும் கற்க்கிறேன் கவனம் குறையாது.

முற்பிறவியைப்பற்றி நானும் அறியாததே
ஆனால்,
ஒரு பிறவியில் மூன்று தலைமுறையினர்
முகம்காட்டியும், முகம்திருப்பிக்கொண்டும்
செல்வதை நாம் அனைவரும் அறிந்ததே.

யார் யார் அந்த மூன்று முக்கியத் தலைமுறையினர்?

உதாரணமாக, இளம்தம்பதியினரின் வாழ்க்கையை எடுத்துக்கொண்டால்,
அக்காலம் முடித்து, இக்காலம் முடிக்கும்
அவர்களது பெற்றோர்கள்,
இன்று வாழும் அவன்-அவனது மனைவி,
நாளை, அவர்களது பிள்ளைகள்.

இம்மூன்று தலைமுறையில்,
மூன்று தலைமுறையினரும்
மூன்று முக்கியக் காலங்களை ஏற்க்கின்றனர்,
துவக்கம், நடுநிலை மற்றும் இறுதி.

இவர்களில்,
யார் எக்காலத்தில், எக்காரியம் செய்தாலும் -
முக்காலத்தில் (அக்காலம், இக்காலம் மற்றும் பிற்க்காலம்),
மூன்று தலைமுறையினரையும் கடக்கும் காலங்களில்,
அவர் எக்காரியம் செய்தாரோ,
அதற்க்கான பாடம்
அவர் மட்டுமல்லாது
அம்மூன்று தலைமுறையிலுல்லோர்களும்
வெவ்வேறுகோணங்களில் கற்றே ஆகவேண்டும்.
இதுதான் நியதி. இதுதான் விதி.

(உதாரணம்,
ஊரில் தாத்தாவின் புகழால்,
பேரன், பேத்தியையும் ஊரே மதிக்கும்.

அதே ஊரில்,
ஒரு கன்னிப்பெண் ஓடிவிட்டால் என்றதும்,
குடும்பத்துப்பெரியோரின் கதி என்னவென்பதும் நாம் அறிவோம்.)

பள்ளிக்கூடம் சென்றால்
கல்விப்பாடம் கற்றே திரும்பவேண்டும்
பிறப்பு என்றொன்றிருப்பது உண்மையாதலால்
பிறவிப்பாடம் கற்றே திரும்பியாகவேண்டும்.

ஏன் கல்விப்பாடம் கற்க்கிறோம்?
வாழ்வில் பலருக்கு, நாம் அறிந்ததைக் கற்றுக்கொடுக்க.
அவ்வாறே,
ஒருவனது பிறவிப்பாடம்
அடுத்தத் தலைமுறையினர் அறிந்து நடந்துக்கொள்ளவே.

நற்காரியம் செய்தால் நல்லதைக் கற்ப்போம்.
கெட்டகாரியம் செய்தால் அதற்குத் தகுந்த பாடத்தைக் கற்ப்போம்.

தற்போது,
தங்கள் கருத்துக்கள் எப்பாடம் எனக்குப்புகட்டும்?
நான் அறியேன்.

எழுதியவர் : A பிரேம் குமார் (28-Jan-12, 4:30 am)
பார்வை : 343

மேலே