எவ்வளவு கொடூரமானது இந்த மெய் அன்பு............!!
விடுமுறை முடிந்து விட்டது... மீண்டும்
செல்ல வேண்டும் வேளையில் சேர
அயல் ஊருக்கு.....!!
எந்தன் கால் படா இடம் இல்லை
எந்தன் ஊர் தெருக்களில்...!!
இன்று ஏனோ.. இரண்டு , மூன்று
நாள் விருந்தாளி போல்...!!
செல்ல வேண்டிய நேரம் நெருங்க
பொருட்கள் எடுத்து வைத்து
கொண்டிருந்தால் எந்தன் அன்னை
அமைதியாக....!!
இந்த விடுமுறை நாட்களில் எனக்கு
பிடித்த ஒவ்வொன்றாய் பார்த்து பார்த்து
சமைத்து போட்ட எந்தன் அன்னை..!!
கிளம்புகிறேன் என்ற எந்தன் தடுமாறும்
வார்த்தைகள் கேட்டு மௌனம் கலைத்தாள்
அந்த அன்பு கரங்களில் எந்தன் தலை
முடி வருடலில் அம்மியில் அரைத்த அந்த
மஞ்சள் மனம் உணர்ந்தேன்...!!
என் தவறுகளை சுட்டிகாட்டி என்னை
நேர்வழி படுத்த திட்டு என் அன்பு
தந்தையே... இந்த நொடிபொழுதில்
மட்டும் ஏன் இந்த அன்பு புன்னகை
என்னால் எப்படி போக முடியும்...?
கிளம்பும் நொடி பொழுது...!!
என் தங்கையின் குழந்தையின் கன்னம்
கில்லி அந்த அழகிய முத்தம்..!!
அந்த நொடி கணத்தில் மெல்லிய கை
விரல்களால் என் முகத்தில் கோலமிட்டு
அந்த ஒரு தெத்துபல் சிரிப்பு...!!
அந்த சிரிப்பின் அர்த்தம் இன்னும்
விளங்கவில்லை எனக்கு..?
அமைதியாய் என் தங்கையின் குரல்
" மாமா போய் வராராண்டா செல்லம் "
நான் செல்வதை அறிந்திருந்தால்
நிச்சயம் சிரிதிருக்கமாட்டால் என்
அன்பு குட்டி..!!
என் அண்ணனிடம் எத்தனை முறை
சண்டை இட்டுருப்பேன்...!! இப்படி
வலித்ததில்லை இன்றோ பேருந்து நிலையத்தில்
இறக்கிவிட்டு அந்த சில நொடி மௌனம்
களைந்து " பார்த்து போ " என்ற அந்த
அன்பான வார்த்தை.. ஐயோ அண்ணா..
கிளம்பிவிட்டேன் இருந்தும் நண்பர்களிடம்
சொல்ல மனம் இல்லை..!!
அவர்களின் தொலைபேசி அழைப்பின்
இடைவிடாத திட்டுக்கள்தான் என் இந்த
பிரிவிற்கு உண்மையான மருந்து..!!
அவள் தந்தை உடன் இருக்க
அவருக்கு தெரியாமல் " போய்வா "
என சொல்லும் என் அன்பு தோழியின்
கண்ணின் அசைவுகள்...!!
இந்த ஜென்னலோர பயணம்...
பிரிவின் வலி நெஞ்சை அறுக்க
கண்கள் கலங்குகின்றது...!!
காற்று அடித்து தூசி கண்ணில்
பட்டுவிட்டதா என்ற மொழி கேட்டு
பார்த்தேன் என் அருகே சக பயணி...!!
என் செய்வது அவருக்கு நான் அளித்த
பதிலோ ஒரு சின்ன சிரிப்புதான்...!!
என் உடல் இங்கு அமர்ந்திருந்தாலும்
என் ஜீவன் என்னமோ சக்கரத்தில் கட்டி
வலுக்கட்டாயமாகதான் இழுத்து வரபடுகிறது ..!!
என் கையில் இப்போது...
என் அன்பு தங்கையின் அருமை
குழந்தையின் கால் கொலுசில் இருந்து
தவறி விழுந்த ஒற்றை குண்டு மணி..!!
நெற்றி வியர்வை துடைக்க என் அன்னை
பரிமாறிய உணவில் சோற்று பருக்கையில்
ஒட்டிக்கொண்டு வந்த எந்தன்
அன்னையின் ஒற்றை தலை முடி...!!
என் தந்தையின் முகத்தை வெகுநாள்
அலங்கரித்த இந்த மூக்கு கண்ணாடி
சற்று அலுகாகத்தான் உள்ளது
என் செய்வது ஒரு பக்கம் உடைந்து
பயன்படாமல் பரணில் வைகப்பட்டிருந்தது
எந்தன் அண்ணனின் படுக்கை அறை
பெட்டியில் இருந்த அவனது ஒற்றை
புகைப்படம்...!!
நண்பர் கூட்டத்து அந்த துரித உணவு
கடையில் ஒற்றை வேலை
சிற்றுணவு...!!!
இறுதியில் பணம் கொடுக்க அவன், இவன்
என கை காட்ட கடைசியில் என்னவோ
மாட்டியவன் நான்தான்..!!
அந்த பொழுதில் கடைக்காரர் கொடுத்த
இந்த " பில் "....!!
இவை அனைத்தும் என்னிடம் இருப்பதை
அவர்கள் அறிய வாய்ப்பு இல்லைதான்..!!
ஏனெனில் இவை அனைத்தும் அவர்களுக்கு
தெரியாமல் நான் எடுத்தது...!!!
இவை அனைத்தும் என்னிடம் இருக்க
என் சந்தோசங்கள் மட்டும் ஏனோ
அவர்களிடம்....!!!