அத்தனையும் தெரிந்தும்..

நேரம் தவறாமல் காத்திருக்கிறேன்..
நீ வரமாட்டாய் என்று தெரிந்தும்..

அழகாக அலங்காரம் செய்து கொள்கிறேன்
நீ ரசிக்கமாட்டாய் என்று தெரிந்தும்..

தொலைபேசியை நாடுகிறேன்..
நீ அழைக்கமாட்டாய் என்று தெரிந்தும்..

உன்னையே நினைக்கிறேன்
நீ எனக்கில்லை என்று தெரிந்தும்..

இவை மட்டுமல்ல..

இப்போது கூட..
உன்னைப்பற்றிய..
உனக்கான..
கவிதைகளைத்தான்..
எழுதிக்கொண்டிருகிறேன்..

நீ படிக்க மாட்டாய் என்று தெரிந்தும்..

எழுதியவர் : Janani (29-Jan-12, 8:51 pm)
பார்வை : 443

மேலே