திகட்டாத அன்புக்காய் .. . .

அது என்னவோ தெரியவில்லை
உன்னை நினைக்கும்
போதே புன்னகை
அரும்பி விடுகிறது . .

எங்கோ செல்கையில்
யாரோ யாரையோ
உன் பெயரில் அழைத்தாலும்
அனிச்சையாய் திரும்பி
பார்க்கிறேன் . ..

எந்த பேனாவை
வாங்கினாலும்
ஓம் எழுதியவுடன்
உன் பெயரைத் தான்
எழுதி பார்கிறேன் . . .

உன் உதடுகள்
முணுமுணுத்த
ஒரு சில பாடல் வரிகள்
முழுப் பாடலாய்
என் மனதில் நித்தமும்.. .

உன் கூட பேச வேண்டும்
என்று புரியாத ஆங்கில
படங்களையும் விரும்பி
பார்க்கின்றேன் . . .

தூரத்தில் யாரேனும்
உன் தலைஅமைப்பில்
உன் உயரத்தில்
போய் விட்டால் கூட
கிடந்து தவிக்கிறேன்
நீதானோ என்று . . .

ஒரு வேலையும்
இல்லாமல் அடிக்கடி
உன்னை பார்க்கிறேன்
ஒரு வேலையாய்
வந்தேன் என்று சொல்லி. .

நீ என்னை திட்ட
வேண்டும் என்று
தெரிந்ததையும்
தவறாய் செய்கிறேன்
பலமுறை . . .

இப்படி உனக்காய்
என்னில் அடுக்கடுக்காய்
மாற்றங்கள் என்னிடம்,

தேன் கூட திகட்டும்
என்பார்கள் - ஆனால்
உன் நட்பு என்றென்றும்
திகட்டாத அமிர்தம் . . .

அமிர்தம் அளவுக்கு
மிஞ்சினால் விஷம்
என்று தராமல்
இருந்து விடாதே . . .
ஒன்றும் செய்யாது அது . . . .

எழுதியவர் : honey (30-Jan-12, 12:14 pm)
பார்வை : 446

மேலே