பிரியாவிடை

வாழ்வென்னும் புதிருக்கு
விடைத்தேடி கானல்நீரில்
வரண்டு கிடந்த
என் விழிகளுக்கு
கலங்கரை விளக்காய் காட்சியளித்த
என் கல்லூரிக்கு
கூற விழைகிறேன் பிரியாவிடை

பாலைவன இதயத்தில்
நட்பெனும் பாலம் கொண்டு
பசுமை புரட்சி செய்திட்ட
என் இணைப்பிரியா நண்பர்களுக்கு
கூற விழைகிறேன் பிரியாவிடை

விழிகள் சிந்தும் நீர்
புன்னகையில் பொலிவுறும் முகம்
இவ்விரண்டிற்கும் துணைநிற்கும்
மூன்ரேழுத்து தாரக மந்திரமாம் நட்பு
ஆம் அந்த நட்பிற்கு
கூற விழைகிறேன் பிரியாவிடை

பலவண்ண உதிரும் பூக்களிடையே
ஒருவண்ண உதிரப்பூவாய் காட்சியளிக்கும்
என் கல்லூரி தோழிகளுக்கு
கூற விழைகிறேன் பிரியாவிடை

என் இதயத்தை கொள்ளைகொண்டு
சிறகடித்து கல்லூரியை வலம்வரும்
முதலாம் ஆண்டு வண்ணத்து பூச்சிகளுக்கு
கூற விழைகிறேன் பிரியாவிடை

மலர்ந்த மலர்களை
வழியனுப்பும் மலரும் மொட்டுகளுக்கு
கூற விழைகிறேன் பிரியாவிடை

எழுதியவர் : சத்தியன் (31-Jan-12, 4:54 pm)
பார்வை : 2742

மேலே