யாசுலாவுதே தேன் மலர் மீதே

யாசுலாவுதே தேன் மலர் மீதே - வெகு
பழைய திரையிசைப் பாடல்......
கண்ட சாலாவின் கணீர் குரலில்
காற்றோடு தவழ்ந்து வந்தது வானொலியில்..!

மெட்டு தமிழில் என்னை தாலாட்டியது
மெல்ல மயங்கினேன் எனினும் இனிய
" யாசுலாவுதே " என்ற சொல்லின் பொருளென்ன?
இயற்றிய கவிஞர் என்னை சிந்திக்க வைத்தார். !

தமிழில் தேடித் தெளிந்தேன் இப்போதைக்கு
தென்றல் ஒரு மலரின் காம்பை
தழுவி வளைப்பது சுயம்வர வில்லை
மணமகன் வளைத்து ஜெயிப்பது போல்
வளைத்து தென்றல் பூவிடம் காதல் சொல்கிறதாம்.......

அப்பப்பா அசந்தேன்...!

ஒரு சொற்றொடரில் இவ்வளவு பொருளா..?
அருமை அறுபதம் அழகு இனிமை...!

அடுத்த ஸ்டேசனை மாற்றினேன் வானொலியில்

கொட்டப் பாக்கும் கொழுந்து வெத்தலையும்
போட்டா வாய் செவக்கும் - இந்த
அறிய கண்டு பிடிப்பு பாடல் புரிந்தாலும்
கொட்டப் பாக்கு மட்டும் புத்தியை ரொம்ப
நல்ல விதமாகவே யோசிக்க வைத்தது...!

கொட்டப் பாக்குக்கு எனக்கு
தெரிஞ்ச வரைக்கும் அர்த்தம் போதும்
தயவு செய்து அந்த " யாசுலாவுதே "
தமிழ் சொல்லுக்கு அர்த்தம் சொல்லுங்களேன்

நான் புரிந்து கொண்டது சரிதானா ?
யாசுலாவுதே தேன் மலர் மீதே
தென்றலே இனிய தேரினில் வாராய்....
உல்லாசமாய் உற்சாகமாய்...ஹா.....( மெட்டு )

எழுதியவர் : (10-Feb-12, 4:13 pm)
பார்வை : 196

மேலே