தாய்

அழுதால் சிரிக்க வைத்தாய்;
சிரித்தால் கொஞ்சி மகிழ்ந்தாய்;
விழியின் தூசியை
எனக்கே தெரியுமுன் அகற்றினாய்;
தலை கோதி சீரட்டினாய்;
பசித்தால் பால் கொடுத்தாய்;
என்றும் உன் அரவணைப்பில்
பாதுகாபாய் உணர வைத்தாய்;
என் முதல் பார்வை,
முதல் சிரிப்பு,
முதல் கோவம்,
முதல் அழுகை,
முதல் முத்தம்,
அனைத்துக்கும் சொந்தம் நீயே;
பத்து மாதம் மடியில் சுமந்தாய்;
வாழ்க்கை முழுமைக்கும் மனதில் சுமக்கிறாய்!!!

எழுதியவர் : சுகன்யா.க (11-Feb-12, 1:01 am)
சேர்த்தது : sugan89
பார்வை : 301

மேலே