காகிதம்
பணமென்ற பதவி அட்டைகளால் அழிய
புத்தகப் புகழ்களும் மின்பதிவில் புதைய,
செய்தித்தாளும் தொலைக் காட்சியில் தொலைய,
குறிப்புக் கோப்புகளோ கணினியால் காணவில்லை.
காதல் கடிதங்கள் அலைபேசியில் அடங்கிடவே,
காலம் காலமாய் கோலோச்சிய காகிதம்,
பத்திரத்தில் மட்டும்தான் பத்திரமாய் உள்ளதோ இன்று?