நன்றி சொல்லப் பழகு
காய்ந்த ஓலை கூடையானது - சுட்டுக்
காய்ந்த மண்ணும் செங்கலானது - செத்து
மாய்ந்த யாவும் பயன்பட்டது - ஆனால்
மனிதன் மட்டும் நன்றி மறந்தான்...
மரத்தை வெட்டியே மனைகளை கட்டினான்-தன
மனத்தை வெட்டியே தனக்குத் தானே
மரண ஓலை தயாரிக்கிறான்.......
அடுத்த ஜென்மத்தில்
அவனுக்கு வாலிருக்கும்....
குரங்காக நிச்சயம்
மறுபடி பிறக்க மாட்டான்...
நன்றியை அவன் பழகவேண்டும்...
நாயாக அவன் பிறந்தே தீருவான்