நண்பர் கூட்டம்
நீ வேண்டி நின்ற தெய்வங்கள்
கோயில் தாண்டி வருவதில்லை.
நீ வேண்டாமென வெறுத்தாலும்
இதயம் வாங்க மறுத்தாலும்
பாலைவன மார்பில்
உனக்காக பால் சுரக்கும்.
நரகத்திலும் உன்னோடு நடக்கும்
நாளையும் உன்னோடு இருக்கும்.
சாதிமத ஒழிப்பு திட்டம்
உன்
நண்பர் கூட்டம்...
----தமிழ்தாசன்----