பழைய நண்பன்
நட்பு
விஷயமே இல்லாமல் விடிய விடிய பேசும் போது இருந்தது
காசு இல்லாமல் தவித்த போது இருந்தது
என் கண்ணீரை துடைத்த உன் கை விரல்களில் இருந்தது
என் பாரத்தை தாங்கிய உன் தோளில் இருந்தது
என்னை கடிந்து கொண்ட உன் உதடுகளில் இருந்தது
என் முக பாவனைகளை உணர்ந்த உன் கண்களில் இருந்தது
என்னை உன் சோதரனாய் -
உன் குடும்ப சக உறுப்பினர் போன்று சுமந்த உன் இதயத்தில் இருந்தது
நாய் குட்டிகளை போன்று ஒருவன் மேல் ஒருவன் -
உருண்டு பிறன்ட போது இருந்தது
நீ காதலுற்றதை சொல்ல தடுமாறிய போது இருந்தது
நீ காதலுற்றாய்
உன்னை மறந்தாய்
என்னை மறந்தாய்
என்னை அறிந்தும் அறியாமலும் நடந்தாய்
காலம் நகரும்
கடவுளிடம் எனக்கு வரம் ஒன்று கிடைத்தால் நான் கேட்க விரும்புவது இந்த நிஜங்களை அல்ல
உன் நெஞ்சில் புதைந்த என் நினைவுகளால் தூண்டப்படும் ஒரு sottu இமை துழி மட்டுமே
கந்தை கோலம் புகுந்த கல்லூரி விடுதிகளில் இருந்த சந்தோசம்
கார்பொரேட் வாழ்க்கையில் கரு அருக்க பட்டதே
இமை துளிகள் நிரம்ப இனிய தோழன்..........