முடிவுகளற்ற தேடல்க

எப்படி சொல்வது இந்த பட்டாம்பூச்சிகளுக்கு
என் வாகனத்தின் விளக்குகள்
அவைகளின் இணை அல்ல என்று.
என் பயணங்களில் பலியிடப்படும் உயிர்களை
குறித்து கவலைப்படும் நேரம்
எனக்கில்லை என்று.
என் சகமனிதர்கள் போல்
நானும் நகர்ந்து செல்கிறேன்
முடிவுகளற்ற தேடல்களின் பட்டம் பூச்சியாய்
தெளிவற்ற ஓர் ஒளியை நோக்கி...................