தவிப்பு - ஆண் எனும் ஆணவத்தால்
ஆண் எனும் ஆணவத்தால்
பெண்ணையும் பொருளென
தன்னையே வியாபாரமாக்கி
பெண் மனைவியாகப் பெற்றவனே
பெண் போதைப் பொருளல்ல...
ஆண் எனும் ஆணவத்தில்
பெண்மையினை வென்று (?)
பெற்றிட்டாய் மக்களினை
கடமை முடிந்ததாக
கருத்தில் கொண்டு....
உறக்கம் விழித்து
உண்ண உணவிட்டு
உடை, ஆடை அலங்காரமிட்டு
உன்னையும், உன் மக்களையும்
ஊர் கூடி உறவாட
ஊர் கோலம் போக - தன்னையே
பெண் தியாகம் செய்ய...
ஆண் எனும் ஆனவத்தில்
தனியாக இருக்க
தவமாய் இருப்பது போல் - நீ
தனியாமல் புலம்பினாலும்
தயக்கமின்றி கூறிவிடுவாள்
"தங்களுக்கு ஒன்றுமே தெரியாது"
எனும் உண்மையினை
ஆண் என்ற
ஆடை உடுத்திட்ட, அளவளாவும் பொம்மையென...
தெரிந்தும் உரைத்திடுவாய்
இன்னும் ஒரு வாரம்
இருந்து வரலாமே
தனிமை இனிமையென
ஆண் எனும் ஆணவத்தில்...