தமிழே நீதான் அழகே..!!

கவிதை என்று
எழுத நினைத்தால்...
என் தமிழில் சொற்கள்தான்
எத்தனை எத்தனை!
எடுக்கவும் முடியாமல்
விடுக்கவும் முடியாமல்
அர்த்தமுள்ள சொற்கள்
அழகுத்தமிழ் சொற்கள்
இனிய தமிழ் சொற்கள்
இன்பத்தமிழ் சொற்கள்
அடடா அடடா அழகே..!!
தமிழே நீதான் அழகே..!!

எழுதியவர் : எழுத்து சூறாவளி (29-Feb-12, 2:57 am)
சேர்த்தது : சீர்காழி சபாபதி
பார்வை : 291

மேலே