வட்டி கட்டி வயிறு எரியுதா?
மாசம் பொறந்தாலே மனசு குமுறுதா?
மாப்ளே! வட்டி கட்டி வயிறு எரியுதா?
கையை நீட்டி காசு வாங்கி
கட்டிடலாம்னு நெனச்சே
வட்டி குட்டி போட்டு
பெருத்ததாலே வருத்தப் பட்டு முழிச்சே
கையில் காசு இருக்கும்போது
கண்டபடி திரிஞ்சே நீ கர்ணனாட்டம் சிரிச்சே
கையில் காசு கொறஞ்சவுடன்
தலைமறைவா திரிஞ்சே
மிஸ்டு காலையும் நோண்டி நோண்டி
மிஸ் பண்ணாம பேசுவ.
இப்ப கடனக்கேட்டு போனு போட்டா
கண்டுக்காம விடுற
ஒரு பாட்டுல பணக்காரன் ஆவறது சினிமா
அத நெனச்சி படுத்திருந்தா மவனே
அதான் உனக்கு எனிமா.
இனிமே சேர்த்து வச்சி சேர்த்து வச்சி
செலவு பண்ணப் பாரு
கடன வாங்கி செலவு பண்ணா
கட்டில் தான் உனக்கு தேரு.