உன் உயிர் வாழும் என் இதயத்தில்,,,,

முதல் பாதி
இரண்டாம் பாதி என்று
எழுத தொடங்கும் போது
எல்லாவற்றிக்குமே ஒரு முடிவுள்ளது
ஆனால் உன்னை பற்றி எழுதும் போது மட்டும்
ஏன் முடிவில்லாமல் நீண்டு கொண்டே செல்கிறது
இந்த வரிகள்,,,,

பேனாவில் மை தீர்ந்த பின்னும்
மை நிரப்பி மீண்டும் மீண்டும் உன்னை பற்றியே
எழுத தூண்டுகிறது,,,,

என் சிந்தனையில்
உன்னை தவிர வேறொன்றும் இல்லை
ஆதலால் தான் உன்னிடம் தோற்று
நிக்கிறேன்,,,,

நான் உன்னிடம் சொல்ல நினைத்த
அனேக வார்த்தைகள்
என் கவிதை வரிகளோடு தற்கொலை
செய்து கிடக்கிறது
சிலர் படித்தும் புரிவதில்லை
புரிந்தும் உணர்வதில்லை,,,,

உனக்காக நான் மண்டியிட்ட
இடங்கள் அநேகம் உண்டு
என் கவிதை வரிகளில் ஆனால்
உன்னால் மிதிபட்ட இடங்களை மட்டும்
மறைத்துள்ளேன்,,,,

காற்று வீசி மரங்கள்
ஓய்ந்த பின்னும் நீ விட்ட
மூச்சிக்கற்றை மட்டுமே தேடி தேடி
ஓடி கொண்டிருக்கிறேன்,,,,

சூரியன் மறைந்து
நிலா தோன்றி மறையும் வரையிலும்
உன் நிழல்களை மட்டுமே தேடி தேடி
தேயிந்து கொண்டிருக்கிறேன்,,,,

இந்தி பேசும் இந்த பூமியிலே
உன் திக்கி பேசும் தமிழை தேடி
நானும் ஓர் தமிழனாய்
தவமிருக்கிறேன்,,,,

உன் உயிர் வாழும் என் இதயத்தில்
முப்பொழுதும் உன் கற்பனைகளோடு,,,,

இப்படிக்கு,,,,,,,,,,,,,உன்னவன்

எழுதியவர் : நந்தி (2-Mar-12, 3:47 pm)
பார்வை : 363

மேலே