மௌன மடல்
எனதுயிர் மௌனமே
உன் மௌனமான மனதிற்கு -என்
மனதிலிருந்து ஓர் மடலும்
மௌனமாகவே !..................
எம் மனதின் மௌனமான சங்கமங்கள்
மௌனமாகவே அடங்கிப் போயின..
மௌனிக்கும் கணங்களில்
மௌனங்கள் பேசிடும் வார்த்தைகளோ
ஆயிரம் அல்லவா !!
மனதின் மௌன மொழிகளை
மறுக்காமல் புரிந்து கொள்ளேன்.........
மறைந்திருந்து நீ புரியும் மௌன லீலைக்கு
என் மௌனங்கள் மட்டுமே தூதாகும் !...
உன் மௌனங்களை என் மௌனங்களால் மட்டுமே
கண்டு கொள்ள முடியும்...........
மௌனம் மௌனம் மௌனம் !!!
எப்போது உடைக்கப்படபோகிறது உன் மௌனம்
உன் மௌன லீலைகளின் முடிவாக
எப்போது என் கண்களில் --- உன்
உருவத்தின் காட்சிகள் ????...........
உன் மௌனத்தின் தண்டனையில் --- என்
வார்த்தைகள் மரணித்துக்கொண்டிருக்கின்றன........
என் மனது எழுதும் உனக்கான மடல்களும்
மௌனமாகவே காத்திருக்கின்றன
உனைக்காணும் அந்த நொடிக்காய்.........