[135 ] பிரிந்தும் வாழ்வோம்..!

பாகான நம்காதல் பதத்தில் முற்றிப்
பக்குவமும் கெட்டதடி வாழ்க்கை என்னும்
மாகாத வழியினிலே நீயம் நானும்
மனமறியாது எதிர்வந்தோம்! மயங்கி விட்டோம்!
ஆகாத செயலில்லை அதுவென் றாலும்
அருகுள்ளோர் அதைத்தடுக்க முன்று வென்றார்!
நோகாது நோந்துல்லாம் நோடித்தோம்! அன்பு
நோயாக வளர்ந்ததடி ! மருந்தாய் இல்லை!

இல்லாத பொருளில்லை அன்பு நம்முள்!
இருந்தும்அதன் பயன்காண வரவேற் பில்லை!
சொல்லாத கதையில்லை நமது நெஞ்சம் ;
சொல்லுதற்கு மொழியற்று வெளிப்பா டில்லை!
நில்லாத பொருளில்லை நினைப்பு நம்முள்
நெருங்கியவர் அதைநொண்டி எனவே சொன்னார்!
பொல்லாத வேளைஎனப் பொய்யைச் சொல்லிப்
போவதற்கும் பிரியமில்லை! புரிவா யோடி!

கண்பார்த்த போததனைக் காத்துத் தோற்றோம்!
கால்நடந்த போததனைக் கடிந்து தோற்றோம்!
பண்பார்த்த போழுததற்குப் பணியத் தோற்றோம்!
பலருரைத்த பொழுதுணர்ந்து பார்க்கத் தோற்றோம்!
மண்பார்த்து, நடைபார்த்து , மறந்து போன
வருங்காலம் எனும்போருளைக் கருதத் தோற்றோம்!
விண்பார்த்து வளர்ந்துள்ள கோபு ரத்தை
வியந்தாலும் அதன்பொருளை விளங்கத் தோற்றோம்!

தோற்கின்ற வேலையினைத் தொடரத் தானோ?
துன்புறுத்தும் செயல்களினித் துளிர்க்க லாமோ?
நூற்கின்ற நூலிடையில் நைந்தி ருக்க
நூலறுந்து போவதிலே வியப்பும் உண்டோ?
பார்க்கின்ற கண்,ஒளியில் குன்றிப் போனால்
பதறாமல், குத்துவமோ? பயன்ம றந்து
வேர்க்கின்ற நிலையழிப்போம்! வியனி லத்தை
விளங்கவைக்கும் செயலேண்ணிப் பிரிந்தும் வாழ்வோம்!
-௦-

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன் (3-Mar-12, 10:00 pm)
பார்வை : 250

மேலே