பெண்மையே!
அகிலமே போற்றும்
அன்புதெய்வமாய் நீ
எதனையும் எதிர்பார்த்திடாமல்
ஏற்றம் தந்தவளும் நீயே
உடன்பிறந்தும் பிறவாமலும்
பாசத்தை பகிர்ந்தவளும் நீயே
வெறுப்பால் மனம் நொந்தபோது
நம்பிக்கைதரும் நட்பாய் நீ
இளமைக்கு இனிமை சேர்த்திடவே
இறைவன்தந்த உறவாய் நீ
மகிழ்ச்சியோடு வாழ்வு தொடர்ந்திடவே
மனதைபுரிந்த துணையாய் நீ
மகிழ்ச்சியான வாழ்விற்கு சான்றாய்
மற்றொரு உயிர்சுமந்தவள் நீ
கருவறை தொடங்கி கல்லறைவரை
காணும் யாவருக்கும் அழகாய் நீ
நீயே,
ஆணின் ஆதியும்அந்தமும் ஆனாய்
மண்ணில் பிறந்திட்ட புதுமைப்பெண்ணாய்!
(என் அன்னைக்காக இக்கவிதை....@அனித்பாலா )