" நவீன நட்பு எதிரொளிக்கிறது " - நெல்லை பாரதி

'எழுத்து' க்களால்
எழுப்ப படும்
எந்திர (கணிப்பொறி) நட்பு
முகவரி இல்லாமல்
முன் உதவி செய்யும்
மூன்றாம் நபர் நட்பு
பார்க்காமல் கூட
பாசக்கரம் நீட்டும்
பாலங்களின் நட்பு
ஒரு நிமிட பயணத்தில்
ஒருமித்து போகும்
ஓயாத நட்பு
என நவீன நட்புகளும்
எதிரொளிக்கிறது
என்றும் பிரகாசமாய் !!!