என் தேசியக் கொடி

குதூகலமாய் கொண்டாடியாயிற்று....
குடியரசு தினத்தை...
மறுநாள் வீதியெங்கும்....
தாயின் மணிக்கொடி பாரீர்....
அதை மிதித்த படி செல்லும்
மனிதர்கள் காணீர்....
குப்பை வண்டிகள் எங்கும்
மூவர்ணக் கொடிகள் முந்தும்....
எரிதழல் எந்தன்
தாய்க் கொடி தின்னும்.....
என் எண்ணம் எங்கும் வேதனைகள்
மட்டுமே மிஞ்சும்....
தேசியக் கொடி என்பதென்ன?
வெறும் காகிதமா?
அது....
எம் தியாகிகளின் வரலாறு....
எம் தேச வளர்ச்சியின் ஒருகூறு....
எம் எழுச்சியின் அடையாளம்....
அதை மிதிப்பதும் எரிப்பதும்
என் தேசத்தின் அவமானம்.....
என எண்ணுவோருக்கு மட்டுமே
உரித்தாகும் என் தேசத்தின் அபிமானம்....

எழுதியவர் : (6-Mar-12, 2:09 pm)
பார்வை : 446

மேலே