காதல் இருந்தது.....!!!
என் வீட்டிலிருந்து
நீ வெளியே போகும் பொழுது
என்னை பார்த்தவுடன்
உன் உள்ளங்கைகளை
இருக்க மூடிகொண்டாய்....
கைகளில் என்ன?
ஏன் மறைக்கிறாய் என்ற என்னிடம்,
கண்டுபிடிக்க சொல்லி
சிறிது நேரம் விளையாடு காட்டி
பின்
எதுவுமே இல்லையென
கைகளை காண்பித்து
என்னை ஏமாற்றிவிட்டதை
நினைத்து சிரித்தபடியே
சென்றுவிட்டாய்...!!!
ஆம்.....
எதுவும் இல்லையென
நீ உன் கைகளை
காண்பித்த பொழுது
உன் கைகளில் எதுவும் இல்லை
ஆனால்....,
உன் கண்களில் தான்
என் மீதான காதல் இருந்தது தெரிந்தது.....!!!