நனையுது நெஞ்சின் நினைவுகள்

பனியில் நனைந்து
பூத்தது புது மலர்
பருவத்தில் நனைந்து
பூத்தது உன் எழில்
கனவில் மிதக்கும்
உன் விழிகள்
புன்னகையில் மலரும்
உன் இதழ்கள்
புன்னகையின் பரிசோ
அந்தக் கன்னக் குழிவுகள்
இந்தக் கற்பனையில் விரியுது
மனதில் ஒரு கவிதை
அந்தக் கவிதையில் நனையுது
எந்தன் நெஞ்சின் நினைவுகள்
----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (9-Mar-12, 6:05 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 356

மேலே