குழந்தை

ஆடாத நாவையும் ஆட வைக்கும்
பாடாத வாயையும் பாட வைக்கும்
புன்சிரிப்பில் பூ மழை பொழிய வைக்கும்
கண்ணசைவில் களிப்பிலே திணற வைக்கும்
பிஞ்சுக்கையாலே பட்டின்பம் உணர வைக்கும்
முத்தமிட்டால் முகமெல்லாம் மலர வைக்கும்
மழழையால் மகிழ்சிக்கடல் பொங்க வைக்கும்
சிறு சொல்லால் சொர்கத்தை உணர வைக்கும்
தவழ்கையில் தங்கமாய் ஜொலித்திருக்கும்
மணி நடையில் மத்தாப்பாய் மினுமினுக்கும்
குடுகுடு ஓட்டத்தில் சலங்கை ஒலி கொஞ்ச வைக்கும்
நினைத்தாலே நெஞ்சில் இன்பம் நிறைத்திருக்கும்

எழுதியவர் : து .சாந்தி (9-Mar-12, 7:49 pm)
பார்வை : 280

மேலே