இந்திய தமிழ் மொழி சாவு
இந்திய தமிழ் மொழி சாவு
ஈழ தமிழனின் சாவு
படைக்க வந்தேன்
பிரமனின் கையை தட்டி விட்டு
என் படைத்தான் என்று எண்ணி விட்டேன்
ஈழ தமிழனின் சாவை பார்த்து விட்டு
புரண்டு ரத்தம் ஓட
குண்டுகள் சத்தம் போட
துவண்டு போன என் தாய்மார்கள்
சிசுவின் உடல் வெளியேற
தாயின் உயிர் பறிபோக
உலகை பார்க்கும் முன்னே
சிசு விண்ணை பார்த்ததே
கண்ணை பார்க்க தாயில்லை என்று
மண்ணை பார்த்ததே
உயிர் விண்ணுக்கு போகும் முன்னே
உடல் மண்ணுக்குள் புதைத்து போகுதே
இன் நிலைமை உன்னில் நடந்தால்
நீ என்ன செய்வாய்...
ஈழ மக்களின் ஆன்மா சொல்லுதே ,,,,,
உணவு உண்ண பிதி
தண்ணீர் குடிக்க பிதி
உடைகள் அணிய பிதி
உணர்வை ரசிக்க பதி
படுக்க நினைக்க பிதி
உறங்க நினைக்க பிதி
குரல் எழுப்ப பிதி
குறல் கொடுக்க பிதி
நடந்தால் பிதி
எழுந்தால் பிதி
நாங்கள் யாரும் கேக்கா நாதி ...
நினைத்து பாருங்கள் அவர்களின் கொடுமைகளை
பசி எடுக்குது
வயிறு உள்ளிழுக்குது
உயிர் போகுமோ
என்று மனம் தடுக்குது
பிள்ளை பால் கேக்குது
தாய் ரத்தம் கொடுக்குது
பசியில் நெளிந்து
தாய்
உயிர் பிரிந்து விட்டு போகுது
என் இந்த நிலைமை
என் இந்த கொடுமை
கேப்போமே கைகட்டி நிற்கும்
பாரதத்தாயை............................